spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் நடிகை பிரியங்கா மோகன் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் கடைசியாக பவன் கல்யாண் நடிப்பில் (They Call Him OG) ‘தே கால் ஹிம் ஓஜி’ எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது தவிர கவின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் தற்போது ‘மேட் இன் கொரியா’ – Made In Korea எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் ப்ரொடக்ஷன் நிறுவனம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குனர் ரா. கார்த்திக் எழுதி, இயக்கியுள்ளார்.பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரை பார்க்கும்போது இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்கும்போல் தெரிகிறது. மேலும் இந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ