பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2025 டிசம்பர் மாதம் 18ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இவருடைய 4வது படமான டியூட் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க கீர்த்திஸ்ரன் இயக்கியுள்ளார். சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சரத்குமார், ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். கலகலப்பான பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தைக் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் என்று சொல்லப்படுகிறது. அடுத்தது இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் இப்படத்தை பெரிய அளவில் பாராட்டியிருக்கிறார்களாம். பிரதீப் ரங்கநாதன் மட்டுமல்லாமல் மமிதா, சரத்குமார், ரோகிணி ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியுள்ளனராம். மேலும் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவையும் அருமையாக இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களைப் போல் இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்து கன்ஃபார்ம் ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் என்று கமெண்ட் செய்தது வருகின்றனர்.
