spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மானின் 'காந்தா' பட ட்ரைலர் ரெடி.... அறிவிப்பு எப்போது?

துல்கர் சல்மானின் ‘காந்தா’ பட ட்ரைலர் ரெடி…. அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -

துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.துல்கர் சல்மானின் 'காந்தா' பட ட்ரைலர் ரெடி.... அறிவிப்பு எப்போது?

மலையாள சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் இவர் ‘காந்தா’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்க துல்கர் சல்மானும், ராணா டகுபதியும் இணைந்து தயாரிக்கின்றனர். துல்கர் சல்மானின் 'காந்தா' பட ட்ரைலர் ரெடி.... அறிவிப்பு எப்போது?பான் இந்திய அளவில் உருவாகும் இந்த படமானது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து பாக்கிய ஸ்ரீ போஸ், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவும், அதன் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் 'காந்தா' பட ட்ரைலர் ரெடி.... அறிவிப்பு எப்போது?இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி 2 நிமிடங்கள் 53 வினாடிகள் நீளம் கொண்ட ‘காந்தா’ படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ட்ரைலரிலேயே இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ