நடிகர் சசிகுமார் புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தவிர ஃப்ரீடம், எவிடென்ஸ், மை லார்ட் ஆகிய பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சசிகுமார். மேலும் ‘வதந்தி 2’ வெப் தொடரிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இவர் மீண்டும் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இவருடைய புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி சசிகுமார், செல்வராகவனின் உதவியாளர் ஒருவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கு ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நடிகர் சசிகுமார் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர்கள் யார் யார் என்பது போன்ற பிற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


