வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு துணை முதல்வர் ஆய்வு மேற்க்கொண்டு நடவடிக்கை மேற்க்கொண்டாா்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மோன்தா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மழை காலங்களிலும் வட சென்னை பகுதிகளில் பாதிப்புகள் உள்ளாகும் நீர்நிலைகள் கால்வாய்கள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் உள்ள கேப்டன் கனால், எருக்கஞ்சேரி கனால், கொடுங்கையூர் குப்பைமேடு கனால், எழில் நகர் பக்கிங்காம் கனால் என ஒவ்வொரு பகுதிகளிலும் நேரடியாக சென்று நீர் தங்கு தடை இன்றி செல்கிறதா கனால்கள் தூர்வாரப்பட்டு இருக்கிறதா என்பதை குறித்து எல்லாம் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பகுதியிலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மிதக்கும் நீர் இயந்திரங்கள் மூலமும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு மணல் எடுத்து ஆழப்படுத்தும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

இந்நிலையில் வடசென்னையின் மழை நீர் வெளியேறும் முக்கிய நீர் நிலையான கனால்கள் பாதுகாப்பு குறித்தும் செடி கொடிகள் முள்வேலிகள் அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற இளைஞர் ட்விட்டரில் துணை முதலமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் பதிவிட்டு இருந்தார். அதனைப் பார்த்து நேரடியாக ஆய்வு செய்து வந்ததாகவும் பதிவிட்ட ஜெய்கணேஷ் என்ற இளைஞரை நேரடியாக அழைத்து அவரிடம் ஆய்வு குறித்தும் கனால்களின் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்து சென்றார். ஆய்வின் போது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மாநகர மேயர் பிரியா உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பெரம்பூர் ராயபுரம் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனர்.
பின்னர் ட்விட்டர் பதிவு குறித்து பேசிய ஜெய் கணேஷ் சாதாரண குடிமகனின் ட்விட்டரை பார்த்து நேரடியாக ஆய்வுக் களத்தில் ஈடுபட்ட துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதை இந்த ஆண்டு இல்லாத அளவிற்கு பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்பட வேண்டும். துணை முதலமைச்சரின் வேகமான செயல்பாடு போன்று செடி கொடிகள் அகற்றி தண்ணீர் செல்வதற்கு வழி செய்ய வேண்டும். இந்த ஆண்டு பருவ மழையில் மக்கள் எவ்வித பாதிப்பும் ஆளாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாா்.
மேலும், மக்கள் மீது தமிழக அரசுக்கு மட்டும் பொறுப்பு இருந்தால் போதாது மக்களும் தமிழக அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார். தமிழக அரசுக்கு மக்களும் தன்னார்வர்களும் உறுதுணையாக செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். சாதாரண குடிமகனின் பதிவை பார்த்து இன்று ஆய்வு செய்த தமிழக துணை முதலமைச்சருக்கு ஜெய் கணேஷ் நன்றி தெரிவித்தார்.
தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் – நயினார் நாகேந்திரன்


