தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் பின்வருமாறு:
முந்திரியில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. இது நாள் முழுக்க உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் 4 முந்திரிகளை சாப்பிட்டால் ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

முந்திரியில் உள்ள கொழுப்பு மற்றும் மெக்னீசியம் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை சீராக வைத்திருக்கும். எனவே தினமும் முந்திரி எடுத்துக் கொள்வதால் இதய நோய் தொடர்பான ஆபத்துகள் குறையும்.
முந்திரியில் உள்ள இரும்புச்சத்து, ஜிங்க், விட்டமின் பி6 ஆகியவை மன அழுத்தத்தை குறைத்து கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மூளையின் நினைவுத்திறனும் அதிகரிக்கும்.
இது தவிர இது தோல் மிருதுவாக இருப்பதற்கும், முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அடுத்தது இதில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருப்பதற்கு உதவும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, ஃபோலேட் ரத்தத்தில் ஆக்சிஜன் ஓட்டத்தை சீராக்கி, சோர்வை குறைத்து புத்துணர்ச்சியை தரும். ரத்த சிவப்பணுக்கள் சீரான அளவில் உற்பத்தி செய்யப்படும். ஆகையினால் கர்ப்பிணி பெண்களுக்கு முந்திரி நல்ல பலன்களை தரும்.
குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க முந்திரியை நெய்யில் வறுத்து கொடுக்கலாம். முந்திரியை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்தும் கொடுக்கலாம்.
குறிப்பு:
முந்திரியை தினமும் எடுத்துக் கொள்ளும்போது நான்கு முதல் ஐந்து முந்திரிகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்கும் குறைவான அளவில் தான் கொடுக்க வேண்டும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


