இன்றைய (அக்.30) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.89,000 கீழ் சென்றுள்ளது. கிரமிற்கு ரூ.225 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1800 குறைந்து 1 சவரன் ரூ.88,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 ஆயிரம் அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்துவருவதால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் சரிவை கண்டுள்ளது. கிராமிற்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.165 க்கும் கிலொவிற்கு ரூ.1000 குறைந்து 1 கிலோ ரூ. 1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்



