spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புதுப்பேட்டை 2' விரைவில் தொடங்கும்.... செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

‘புதுப்பேட்டை 2’ விரைவில் தொடங்கும்…. செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன், ‘புதுப்பேட்டை 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.'புதுப்பேட்டை 2' விரைவில் தொடங்கும்.... செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின் ‘கொக்கி குமார்’ என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் இவருடன் இணைந்து சினேகா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் படமாக வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருவதால் ‘புதுப்பேட்டை 2’ திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் இயக்குனர் செல்வராகவன் தனது ஒவ்வொரு பேட்டிகளிலும் இந்த படம் குறித்து அப்டேட் கொடுத்து வருகிறார். 'புதுப்பேட்டை 2' விரைவில் தொடங்கும்.... செல்வராகவன் கொடுத்த அப்டேட்!அதன்படி ஏற்கனவே இதன் ஸ்கிரிப்ட் பணிகள் போய்க்கொண்டிருப்பதாக கூறியிருந்த செல்வராகவன், தற்போது ஒரு பேட்டியில் இந்த படம் விரைவில் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

we-r-hiring

இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 தவிர 7ஜி ரெயின்போ காலனி 2, மெண்டல் மனதில், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ