பராசக்தி படக்குழு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’, சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சுதா கொங்கரா. இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க, ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் அதர்வாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படமானது இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 1965 காலகட்டத்தில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புகளும் மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
When the voice roars, the screen will rise 🔥@iam_RaviMohan starts dubbing for #Parasakthi – coming to cinemas this Pongal#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran… pic.twitter.com/YmiWh3EDqq
— DawnPictures (@DawnPicturesOff) November 10, 2025

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் ரவி மோகன், ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


