spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபோதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…

-

- Advertisement -

திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த முன்னீர் (28), ஜாவேத் (38) ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 16-ந் தேதி மணவாள நகர் போலீசார் கைது செய்தனா். மேலும் அவர்களிடமிருந்து, 55 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருட்களை போலீசாா் பறிமுதல் செய்தனா். அதனைத் தொடா்ந்து, கடந்த அக்டோபர் 23-ந் தேதி அன்று சென்னையைச் சேர்ந்த டான்சர் சிபிராஜ் (25) என்பரிடமிருந்து 54 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரையை போலீசாா் பறிமுதல் செய்து, விசாரணை மேற்க் கொண்டனா். அந்த விசாரணையில் பேரில் நாமக்கல்லில் வசித்து வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மைக்மேல் நம்நடி (43), சென்னையில் வசித்து வந்த காங்கோ நாட்டைச் சேர்ந்த கபிதா யானிக் திஷிம்போ (36) ஆகிய 2 பேரையும் கடந்த அக்டோபர் 30-ந் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும், அவா்கள்  கொடுத்த தகவலின் படி அந்த கும்பலின் முக்கிய தலைவனை கைது செய்ய சிறப்பு படையினர் டெல்லி மற்றும் நொய்டாவில் தங்கி விசாரணை மேற்கொண்டனர்.போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…இதில் மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியும், போதைமாத்திரை கும்பலின் தலைவனாக செயல்பட்ட செனெகல் நாட்டைச் சேர்ந்த பெண்டே (43) என்பவரை சிறப்பு படை போலீசார் கடந்த 8-ந் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து பல சிம்கார்டுகள், போலி அடையாள அட்டைகள் மற்றும் வணிக கடைகள் மூலம் சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனைகள் செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கைது  செய்யப்பட்ட பெண்டே டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  திருவள்ளூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு புழல் சிறையில் அடைத்தனர். செனெகல் நாட்டைச் சேர்ந்த பெண்டே (43) அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசாரால், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மதின் அகமது என்பவர் கைது செய்யப்பட்டு, மெத்தம்பட்டமைன் 55 கிராம், எம் டி எம் ஏ போதை மாத்திரைகள் 40 பறிமுதல்  செய்த போலீசார் மேலும் அவர் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்ற விவரங்களை சேகரித்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் இன்று அடைத்தனர். மெத்தம்பட்டமைன் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் மணவாள நகர் போலீசார் இதுவரை 7 பேரை அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நானும் ரவுடிதான் என்று விஜய் கூறுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

MUST READ