நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல தயாரிப்பாளர் குறித்து பேசி உள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் இந்திய அளவில் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது. இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைய, இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’ படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன், ‘பார்க்கிங்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ, நிஞ்சா ஆகிய படங்களின் பூஜை மற்றும் டைட்டில் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் சினிஷ் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “பல வருடங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சினிஷ் என்னிடம் உன்னுடைய நோக்கம் என்ன? என்று கேட்டார். அப்போது எனக்கு ஹீரோவாகும் ஆர்வம் இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டிருந்தேன். வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராகவும், ஒரு காமெடி ரோலிலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரிடம் சும்மா நான் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னேன். அவர் உடனடியாக, சிவா எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்? ஹீரோலாம் வேணாம். உங்களுக்கு செட் ஆகாதுன்னு சொன்னார். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. அதனால அந்த சைட்லையே காமெடி ரோல் பண்ணுங்கன்னு சொன்னார்.
#Sivakarthikeyan in today’s event..😃💥
“Many years back the Producer sinish asked me “What do you want to become Siva..?” I didn’t have any idea to become hero yet I told him I want to become hero..😃 He said, “Siva edhuku ungaluku indha vela lam..” pic.twitter.com/58g8PNeDmH
— Laxmi Kanth (@iammoviebuff007) November 24, 2025

அதன் பிறகு மீண்டும் மதிய இடைவெளியில் சிவா நீங்க ஏன் ஹீரோவாக நினைக்கிறீங்க? என்று கேட்டார். நான் ஏன் ஹீரோவாக கூடாது? ன்னு கேட்டேன்.
அத அதுக்கப்புறம் நான் மறந்தே போயிட்டேன். நான் ஹீரோவானதுக்கு பிறகு 4 வருஷம் கழிச்சு, அன்னைக்கு பேசினதை எதுவும் மனசுல வச்சுக்காதீங்கன்னு சொன்னாரு. அந்த டைம்ல நான் பிஸியா இருந்ததால யார்கிட்டயும் பேச முடியாம போச்சு. ஆனா நான் அவர்கிட்ட இப்ப வரைக்கும் கோபமாக இருக்கேன்னு நெனச்சிட்டு இருக்காரு” என்று கலகலப்பாக பேசினார்.


