எதுவுமே பூர்த்தி செய்யாத கணக்கிட்டு படிவத்தில் கையெழுத்திட்டு திருப்பி அளித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிற்கு வந்து தங்களது கணக்கிட்டு படிவங்களை வாக்காளர்கள் தேடி எடுத்துச் செல்கின்றனா்.
தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்ப படிவங்களை வரும் 4-ம் தேதிக்குள் நிரப்பி அளிக்க வேண்டும். ஆனால், இப்பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டு அதில் பொதுமக்களின் பல்வேறு சந்தேங்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த முகாம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் படிவங்கள் கிடைக்கப்பெறாத பலர் முகாம்களுக்கு வந்து தங்களது படிவங்களை தேடும் நிலையைத் தான் பார்க்க முடிந்தது. மேலும் முகாமில் உள்ளவர்களுக்கே படிவத்தை நிரப்ப தெரியவில்லை என்றும் ஏதாவது நிரப்பி கொண்டு வாருங்கள் என்று கூறுவதாகவும் மூதாட்டி ஒருவா் தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!



