spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்!! விரட்டி சென்று பிடித்த போலீசார்….

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்!! விரட்டி சென்று பிடித்த போலீசார்….

-

- Advertisement -

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திய வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்!! விரட்டி சென்று பிடித்த போலீசார்….கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன்(34), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 21ஆம் தேதி ஓசூர் வந்த சீதாராமனை ஸ்வேதா (35) என்கிற பெண் போனில் தொடர்பு கொண்டு தனக்கு புதியதாக நிலம் வேண்டும் என்றும், நேரில் பேச வேண்டும் என்றும் கூறி ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். சீதாராமன் காரில் பத்தலப்பள்ளி பகுதிக்கு சென்றபோது, அருகே உள்ள வீட்டிற்கு வருமாறு போனிலேயே ஸ்வேதா கூறியுள்ளார். காரை நிறுத்திவிட்டு சென்ற சீதாராமனை 5 பேர்  இழுத்து சென்று அங்குள்ள வீட்டின் அறையில் பூட்டி வைத்து தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவர் அணிந்திருந்த 2.5 சவரன் தங்க சங்கிலி மற்றும் 1சவரன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு 5 கோடி ரூபாய் பணத்தை கொடுத்தால் மட்டுமே வெளியே விடுவதாக மிரட்டி உள்ளனர். சீதாராமன் பலருக்கும் தொடர்பு கொண்டு பணம் கேட்ட போதும் யாரும் பணம் தராததால்  குறைந்தது 25 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சீதாராமன் தனது உறவினருக்கு செல்போனில் மறைமுகமாக பேசியதை தொடர்ந்து, உறவினர் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

we-r-hiring

பின்னர் போலீசார் செல்போன் என்னை வைத்து பத்தலப்பள்ளி பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றபோது சீதாராமனை அவரது காரில் வைத்துக் கொண்டு தப்ப முயன்றவர்களை போலீசார் விரட்டி சென்று சென்னத்தூர் பகுதியில் காருடன் சீதாராமனை மீட்டு,  நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓசூரை சேர்ந்த சுரேஷ்(38), சங்கர்(36), கந்திலி பகுதியை சேர்ந்த அஜய்ராஜ்(19), கோகுல கண்ணன்(36) என தெரிய வந்ததை அடுத்து நான்கு பேரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஓசூர் மோகன், நாகராஜ் மற்றும் ஸ்வேதா என மூன்று பேரையும் அட்கோ போலீசார் தேடி வந்தனர். வெளி மாநிலத்திற்கு தப்ப முயன்ற போது அலச நத்தம் பகுதியில் சூதாளம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா (எ) சந்தியா( 35) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தொடுதேப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் மோகன் (எ) வெங்கடாஜலபதி(37) ஆகிய இருவரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தொழிலதிபரிடம் பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என நினைத்து இச்செயல் செய்தாக அவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சினிமா படபாணியில் போலீசார் அலைகழிப்பு… நண்பரின் செல்போன் மூலம் சிக்கிய தொழிலதிபர்…!

MUST READ