spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி…

எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி…

-

- Advertisement -

செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என கேமிங் உலகில் நேரத்தை செலவிடும் சிறார்களுக்கிடையில் நூலகமும் புத்தகத்தையும் தன் உலகமாக கொண்ட சிறுமி, வாசிப்பாளராக வள(ர)ப்பட்ட, சிறுமி எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளதை கண்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வியந்து பாராட்டியுள்ளாா்.எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி… செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என, கேட்ஜட் உலகில் மூழ்கி நேரத்தை செலவிடும் இன்றைய சிறார்களுக்கிடையில், நூலகம் புத்தகம் என அறிவுசார் உலகில் தன்னை ஐக்கியப்படுத்தி, வாசிப்பாளரை கடந்து எழுத்தாளராக அவதரித்திருக்கின்றார் கோவையை சார்ந்த 12 வயது சிறுமி புனிதம். “ஒரு சிறுமியின் 17 கனவுகள்” என்ற தலைப்பில் எழுத்தாளராக வளம் வர ஆரம்பித்து, வாசகர் வட்டத்தை தன்வசப்படுத்தி வருகிறார்.

அவரது அலமாரியை அலங்கரிக்கும் புத்தகங்கள், Story Telling – First Prize, School Topper உள்ளிட்ட வாசகங்களுடன் வரிசையாக தொங்கும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள். இவைகளுடன் இருக்கும் இவர் 12 வயதான சிறுமி புனிதம் செந்தில்குமார். நான்கு வயதில் LKG பயில ஆரம்பிக்கும்போது பள்ளியில் வழங்கப்பட்ட வண்ணமயமான புத்தகங்களே, இவரின் எண்ணம் முழுவதும் புத்தகம் காலூன்ற காரணம். அப்போது முதல் அடுத்ததுத்த பள்ளி படிநிலைகளில் பாட புத்தகங்கள் மீது இவருக்கு நாட்டம் அதிகரிக்க, இதர நூல்களும் படிக்க ஆரம்பித்திருக்கின்றார். கற்பனை கதைகள் மட்டுமின்றி, உலக வரலாற்றையும் உண்மை நிகழ்வுகளையும் படிக்க ஆரம்பித்த சிறுமி புனிதம், நூலகத்தில் இருந்து பெறப்பட்ட 389 புத்தகங்கள் மற்றும் பெற்றோர் வாங்கி தந்த நூல்கள் என 500-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்திருக்கின்றார். புத்தக வாசிப்பினால் கற்பனை வளம் மிகுந்ததாக தெரிவிக்கும் அவர், புத்தக வாசிப்பு அறிவை கூர்மைபடுத்தும் ஆயுதம் என நம்பி, புத்தகமே சிறந்த நண்பன் என தெரிவிக்கின்றார்.எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி… உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகள் என பலதரப்பட்ட புத்தகங்கள் மீது நாட்டம் கொண்ட இவர், உறவினர் தூண்டுதல் பெயரில் புத்தகம் எழுத திட்டமிட்டு, சமூக பொறுப்புகள் உள்ளடங்கிய புத்தகம் எழுத நினைத்திருக்கின்றார். அதன் அடிப்படையில், ஐ.நா.வின் Sustainable Development Goals- ஐ மைய்யப்படுத்தி வறுமை ஒழிப்பு, பசியில்லா நிலை, பொருளாதார வளர்ச்சி, வளமான சமூகம், உலக அமைதி என 17 குறிக்கோள்களை உள்ளடக்கி, நிலையான வளர்ச்சிக்கு குழந்தை பருவம் முதலே என்ன செய்யமால் என்பது குறித்து, தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு “ஒரு சிறுமியின் 17 கனவுகள்” என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மூன் மேன் ஆஃப் இண்டியா என்றழைக்கப்படும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டு வெகுவாக பாராட்டி இருக்கின்றார். இந்த புத்தகத்தினை வளர்கின்ற தலைமுறை கடைபிடித்தால், 2045-ல் ஐ.நா.வின் இலக்கு நிறைவேறும் என சிறுமி எழுத்தாளர் புனிதம் நம்புகின்றார்.

we-r-hiring

மேலும், சிறுவயது முதலே கதை கேட்பதிலும், கதை சொல்வதிலும் நாட்டம் கொண்ட சிறுமி கற்பனை வளம் மிகுந்து இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். சிறுமி புனிதம் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை, அவரது தந்தையின் தமிழில் மொழி பெயர்ப்பில், தமிழ் மொழியிலே வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறுமியின் வாசிப்பு நாட்டத்தினை அறிந்து அதற்கான வழிவகை செய்த சிறுமியின் பெற்றோர், புத்தக வாசிப்பு சிறுமியை பக்குவப்படுத்தி இருப்பதாகவும், ஒரு விடயத்தை திறம்பட கையாள்வதற்கான நெறிமுறைகளை நூல்கள் கற்றுக்கொடுத்திருப்பதாகவும் சிறுமியின் தந்தை செந்தில்குமார்  மற்றும் சிறுமியின் தாய் அம்ச லீலா பேட்டியளித்துள்ளனா்.

நவீன அறிவியல் உலகில் கேட்ஜெட், கேமிங் என சிறார்கள் நேரத்தை செலுவிடுதல் அதிகரிக்கும் நிலையில், புத்தகம் வாசிப்பது குறைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில், சிறுமி ஒருவர் 12 வயதில் சமூக பொறுப்புடனான எழுத்தாளராக வாசிப்பு திறன் உயர்த்தி இருப்பதும்,   உயர்ந்து இருப்பதும் பாராட்டு வகையில் அமைந்திருக்கின்றன.

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்!! விரட்டி சென்று பிடித்த போலீசார்….

MUST READ