குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துகிறார்.


குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்த உள்ளார்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமாக இருந்த ஜெகதீப் தங்கர் கடந்த மழைக்கால கூட்டத்தொடர் நடந்த ஜூலை மாதத்தில் குடியரசு தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதையும் நடத்தினார்.
ஜெகதீப் தங்கரின் ராஜினாமையைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் முதல் முறையாக மாநிலங்களவை சி.பி ராதாகிருஷ்ணன் வழி நடத்துகிறார்.
இக்கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட உள்ளன. அவை, எஸ்.ஐ.ஆர் விவகாரம் , டெல்லி குண்டுவெடிப்பு , மாநிலங்களவை உறுப்பினர் சோனிகாந்திக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ள நிலையில் சி.பி ராதாகிருஷ்ணன் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


