spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்12 ராசிகளும்…குணங்களும்

12 ராசிகளும்…குணங்களும்

-

- Advertisement -

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. அந்த வகையில், 12 ராசிகளுக்கான குணங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.12 ராசிகளும்…குணங்களும் நெருப்பு ராசிகள்-:-

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள். இந்த ராசிகாரா்கள் மிகவும் கோபமாகவும், முரட்டுத்தனம் உடையவா்களாகவும், தைரியசாலிகளாகவும், தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

we-r-hiring

நில ராசிகள்-:-

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகள். இவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவா்கள். அன்பு நிறைந்தவா்கள். ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.

காற்று ராசிகள்:–

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள். இவர்களது மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டே இருப்பார்கள்.

நீர் ராசிகள்-:-

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள். இவர்கள் இளகிய மனம் கொண்டவர்கள். எப்பொழுதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவா்கள். சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாகவும் இந்த ராசிக்காரா்கள் இருப்பார்கள்.

உறவின் ரகசியம்: சுயநலக் காதலின் சூழ்ச்சி

MUST READ