நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்துள்ளாா்.
நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு. 1938ம் ஆண்டு ஆவணத்தை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை, சி.பி.ஐ களத்தில் இறங்கியது. காங்கிரஸ் குடும்பத்தை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டது என என மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.
அமலாக்கத்துறை வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி அளித்த பேட்டியில், “நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில், சுப்ரமணியசாமி புகாரை தவிர அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யால் கடந்த ஏழு ஆண்டுகளாக எதனையும் கண்டறிய முடியவில்லை. வழக்கில் எந்த ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டுக்கு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. சுப்ரமணியன் சாமி புகாரைத் தவிர எதுவும் இல்லை.

உயர்மட்ட அழுத்தத்தால், அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்தது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மீது புகார் உள்ளது என்பதை பரபரப்பாக காட்டிக் கொள்வதற்காகவே இந்த வழக்கை பதிவு செய்தார்கள். போலியாக இந்த வழக்கை பதிவு செய்ததற்கு பிரதமர் மோடியும், அமிஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளாா்.
அரசியல் வழக்குகளை நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உரிய முறையில் சந்திக்க தயாராக உள்ளோம்”.


