1896-ல் நடைபெற்ற எத்தியோப்பியா – இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அரசு முறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பாரம்பரியமான அட்வா அருங்காட்சியத்தை நேரில் பார்வையிட்டார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஏற்கெனவே ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் முகமது அலியை சந்தித்து பேசினார். எத்தியோப்பியா அரசு முறை பயணத்தில் இரண்டாவது நாளான இன்று எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரின் பியாசாவில் அமைந்துள்ள அட்வா அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
இந்த அருங்காட்சியகம் 1896-ம் ஆண்டு எத்தியோப்பியா – இத்தாலி இடையே நடைபெற்ற போரில் எத்தியோப்பிய ராணுவத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1.5 ஹெட் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள போர் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அருங்காட்சியகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய முரசை ஒலித்ததோடு, போர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட வீரர்களின் உடைகள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் அறிய புகைப்படங்களையும் பார்வையிட்டார்.
காங்கிரஸை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே



