- Advertisement -
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.


பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும். இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தடிழகத்தை உருவாக்க கூடிய கூட்டம் எனக் கூறிய செங்கோட்டையன், ஆண்டுக்கு 500 கோடி வருவாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளாா். விஜய் மனிதநேயம் மிக்கவர், வல்லவர், நல்லவர், அவர் கை நீட்டும் நபர்கள் தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்றும் விஜய்யின் ஆட்சியில் நமக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.


