தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு எடுத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்து, அப்பொறுப்பினை வழங்காததால், அஜிதா தனது கணவர் தூங்குவதற்காக பயன்படுத்தும் தூக்க மாத்திரையில் 15க்கும் மேற்பட்ட மாத்திரைகளை அஜிதா ஒரே நேரத்தில் போட்டுக்கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். நான் உழைத்த கட்சியிலிருந்து தன்னை மாற்று கட்சியின் கைக்கூலி என்று சொல்லியதால் மனம் உடைந்தவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்தனர்.
வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிளினிக்கில் முதலுதவி செய்ய சென்ற நிலையில், அங்கிருந்து தூத்துக்குடியில் ஏவிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே குழாய் மூலமாக மாத்திரை வெளியே எடுக்க முயற்சி செய்தபோது மாத்திரை வெளியே வரவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



