- Advertisement -
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பங்களிப்பு சிறப்பானது. தமிழ் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் எம்.ஜி.ஆர். ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நமது சமூகத்துக்கான எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் பாடுபடுவோம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


