- Advertisement -
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15.8 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தில் சமீபத்தில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
