மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி தனிவிமானம் மூலம் சென்னை வந்தாா். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் செல்கிறாா் பிரதமா். இந்த பொது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ் நாட்டில் தோ்தல் பரப்புரையைத் தொடங்கினாா் மோடி. தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் தமிழ் நாடு நிற்பதாக பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், தோ்தல் சீசனில் மட்டும் தமிழ் நாடு வருபவா் பிரதமா் மோடி என்றும் பாஜக கூட்டணிக்கு தமிழ் நாடு தோல்வியைத் தரும் என்றும் தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தேர்தல் சீசன் வந்தால் தமிழ்நாடு பக்கம் வரும் பிரதமர் மோடி – முதல்வர் விமர்சனம்



