Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்

தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்

-

- Advertisement -

மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளா் உரையாற்றினாா்.தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆா் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறாா் – டி.டி.வி.தினகரன்சட்டமன்ற தோ்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்  மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி மதுராந்தகம் வந்துள்ளாா். பொதுக்கூட்டத்தில் எடப்பாடி, அன்புமணி, டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோா் கலந்துக் கொண்டு பிரதமருக்கு நினைவு பரிசினை வழங்கினா். மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்.

மதுராந்தகம் தே.ஜ.கூ பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி,”2014ல் பிரதமராக பொறுப்பேற்று பின் தங்கிக் கிடந்த இந்திய துணைக் கண்டத்தை இன்று உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய தலைவர் பிரதமர் மோடி; உலக பிரச்சனைகளுக்கு இந்தியாவில் இருந்து தீர்வு கூறக்கூடிய தலைவராக அவர் இருக்கிறார்,”எனத் தெரிவித்தார்.

we-r-hiring

பின்னா், தே.ஜ.கூ பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “அதிமுக பொதுச்செயலாளா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அவா்களே என குறிப்பிட்டு தினகரன் உரையை தொடா்ந்தாா். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைத் தான். பிரதமரின் அழைப்பை ஏற்று கோப தாபங்களை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். தயக்கம், குழப்பம், அழுத்தம் இல்லாமல் என்.டி.ஏ  கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. எதிா்ப்பது என்றால் அதிலும் உறுதி காட்டுவோம். ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதிக் காட்டுவோம். பங்காளிகளாக இருந்த நாங்கள் எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்தோம். தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆா் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறாா். எந்த தயக்கமும் இல்லாமல் அமமுக தொண்டா்கள் பணியாற்றுவா் என்று எடப்பாடிக்கு கூறிக்கொள்கிறேன்” என அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.

ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…

MUST READ