தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக 9 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா். இதுவரை ஜக்தியால் மாவட்டத்தில் 300 நாய்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தெலுங்கானாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விலங்கு நல ஆா்வலா்கள் அதுலாபுரம் கௌதம் மற்றும் ஃபர்சானா பேகம் ஆகியோா் அளித்த புகாாின் படி, ஜனவரி 6 முதல் 9 வரையிலான் மூன்று நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. கிராமபஞ்சாயத்து செயலாளா்கள் இருவரை வேலைக்கு அமா்த்தி தெருநாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்று, அதன் பின்னா் அவற்றின் உடல்களை கிராமத்தின் வெளிப்புறப் பகுதிகளில் வீசியதாக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இந்த கொடூரச் செயலைத் தொடா்ந்து 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வரைத் தடுப்புச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ஷியாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 போ் மீது விசாரணை நடைப்பெற்று வருவதாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வன்முறைச் செயல்கள் விலங்கு நல ஆா்வலா்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெரு நாய்கள் விவகாரம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு..!


