பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.
கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச் சாறுகள், நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை வாங்கி உட்கொண்டு, தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வார்கள். தற்போது பொள்ளாச்சியில் இரவு மற்றும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனாலும் பகலில் வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போதே தர்பூசணி பழங்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவர தொடங்கிவிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து, திண்டிவனம் பகுதியில் தர்பூசணி அறுவடை துவங்கியது. இதில், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று முதல், திண்டிவனம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட தர்பூசணிகள், அதிகளவு வரத்து துவங்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு சில கடைகளில் குவிந்துள்ள தர்பூசணிகளை, உள்ளூர் வியாபாரிகளே, நேரில் வந்து விற்பனைக்காக வாங்கிச்செல்கின்றனர்.

மேலும், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை பகுதியிலிருந்தும் தர்பூசணி வரத்து உள்ளது. அடுத்து இன்னும் சில நாட்களில், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மொத்த விலைக்கு 1 கிலோ தர்பூசணி ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டில் தற்போதுதான் தர்பூசணி வரத்து என்பதால், மார்க்கெட்டில் இப்போது மொத்த விலைக்கு 1 கிலோ ரூ.18 முதல் ரூ.22 வரை என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வரும் நாட்களில் வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும்போது, அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!


