ஆவடியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் ரவுடி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேரை காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவடியை அடுத்து கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர், மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு, ஆவடி கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வீரா, என்பவருக்கு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு ஆவடி கோவில்பதாகை, அண்ணா தெரு அருகே உள்ள ஒயின் ஷாப்பில் இருந்த மணிகண்டனுக்கும் வீராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்துள்ளது.
இதில், ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். பின், மணிகண்டனை, அண்ணா தெருவில் வைத்து கீழே தள்ளி விட்டு, வீரா, பிரதிஷ், அபிதராஜ், சக்திவேல்,மற்றும் சிலர் சேர்ந்து கற்களால் அடித்து கொலை செய்து விட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் உடலை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே எம் சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் ரவுடி வீரா மற்றும் பிரதீஷ், ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த மணிகண்டன் கடந்த 2022ல், ஆவடி ஓ.சி.எப்., மைதானத்தில் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட இரட்டை கொலையில் முக்கிய குற்றவாளி ஆவர். எனவே, முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
“உடைந்து ஒட்ட வைத்த பானை தான் அதிமுக” – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்


