”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடக்கும் சமூக ஊடகப் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடைபெறும் சமூக ஊடகப் போட்டியில் பொதுமக்கள் மற்றும் கன்டன்ட் கிரியேட்டர்கள் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்போர், ”உங்க கனவை சொல்லுங்க” என்ற முன்னெடுப்பின் மையக் கருத்து சிதையாமல் 60 விநாடி வீடியோவை பதிவு செய்ய வேண்டும்.

இந்த சமூக ஊடகப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்பட அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 9498042408 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, ”ஹாய்” அனுப்பினால், வீடியோ பதிவேற்றத்திற்கான கூகுள் படிவ இணைய முகவரி பெற முடியும். அந்த கூகுள் படிவத்தின் மூலம், பிப்ரவரி 9-ம் தேதிக்குள் வீடியோவை பதிவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ”உங்க கனவை சொல்லுங்க தன்னார்வலர்கள்” என சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு, பொதுமக்களின் கனவுகளையும் கருத்துகளையும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் ஒரு மேடையாக அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


