spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…

பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அது தொடர்பான முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தலைமையிலான குழு ஆய்வு செய்யும்.

இதன்படி, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலைமையிலான குழுவினர் தமிழகம் வர உள்ளனர். இந்த குழுவினர் 2 நாட்கள் தமிழகத்தில் முகாமிட்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.

we-r-hiring

இதன்படி, முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வருவமான வரித்துறை, சி.ஆர்.பி.எப், வணிக வரித்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளனர். இறுதியாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக துணை தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து இதற்கான பணிகள் மற்றும் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்

MUST READ