spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்

-

- Advertisement -
அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்
மே 9 முதல் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 1 முதல் தனியார் கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கவிருக்கிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் சுயநிதி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 633 இருக்கின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையை லயோலா கல்லூரி உள்ளிட்ட பல தனியார் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் என்பது இணையதளம் வாயிலாக தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 633 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே முதல் வாரத்தில் 1 ஆம் தேதியிலிருந்து விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்

அரசு கல்லூரிகள் பொறுத்தவரை விரைவில் பல்கலைக்கழகங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிகபட்சமாக 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாள் மே 9 முதல் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அரசு தரப்பிலோ பல்கலைக்கழகங்கள் தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ