spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்...சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி

பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்…சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி

-

- Advertisement -

பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து சந்தேகத்தை கிளப்பிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்...சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை எழுப்பியுள்ளாா். இந்த மரணம் குறித்த சந்தேகங்களை வெளிப்படையாக எழுப்பியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விபத்து குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

we-r-hiring

அஜித் பவார் மரணத்தில் பல தீவிரமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளாா். மேலும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாபற்ற சூழல் உருவாகியுள்ளது என கவலை தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியள்ளாா்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் தெரிவித்திருந்த நிலையில், இந்த விமான விபத்து நிகழ்ந்திருப்பது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், இந்த மரணம் இயல்பான விபத்தா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் செயல்படும் புலனாய்வு அமைப்புகள் சதந்திரத்தன்மையை இழந்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். இதனிடையே, பாராமதி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கவுரவ் கொகாய், ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர்.

முழுசா மாட்டிய விஜய் குடுமி! ஆட்டத்தை முடிக்கும் தவெக! பொன்ராஜ் நேர்காணல்!

MUST READ