- Advertisement -
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களின் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதி புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு(UGC – University Grants Commission) வெளியிட்டது. இதை திரும்ப பெற வலியறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறி ரத்து செய்துள்ளது. மேலும், ஏற்கனவே இருந்த விதிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.



