அண்ணாவை “தமிழர்களின் மனசாட்சி” என புகழ்ந்த முதல்வர், அண்ணாவின் கொள்கைகளே இன்றும் தமிழக அரசியலை வழிநடத்தி வருவதாக தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், ”பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு என்று குறிப்பிட்டுள்ளாா்.

அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான் என்று கூறிய முதல்வர், ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…


