நடிகர் விஜய் முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகே அவர் குறித்து பேச முடியும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பாக எந்த தெளிவான கொள்கையும் இல்லாமல் விஜய் தற்போது ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக கி.வீரமணி விமர்சித்துள்ளாா். மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வளமான கூட்டணியாக இருக்கலாம்; ஆனால் அது வலிமையான கூட்டணி அல்ல என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவதன் மூலம், திமுகவுக்கு ஆதரவு வாக்குகள் மேலும் அதிகரித்துக் கொண்டே தான் போகும் என்றும் கூறினார்.

இதனிடையே, வருமானத்தை மறைத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய், ஊழல் குறித்து பேச எந்தவித தகுதியும் இல்லை எனவும் கி.வீரமணி கடுமையாக சாடியுள்ளார்.
விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய தயாரா? – அமைச்சர் பன்னீர் செல்வம் சவால்
