spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் வந்தால் திருமா போவார்? கடைசி வரை பேரம் பேசும் தேமுதிக! ப்ரியன் நேர்காணல்!

ராமதாஸ் வந்தால் திருமா போவார்? கடைசி வரை பேரம் பேசும் தேமுதிக! ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் 6 இடங்களும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க தயாராக உள்ளனர். ஆனால் பிரேமலதாவின் எதிர்பார்ப்புகள் பெரிதாக உள்ளதால் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி செட் ஆகிவிட்டது. ஓபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் தான் செட்டில் ஆகாமல் உள்ளனர். ஓபிஎஸ் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தபோது என்டிஏவில் சேருவதாக சொல்லிவிட்டு தான் வந்தார். ஆனால் அவருடன் உள்ளவர்கள் எல்லாம் என்டிஏவுக்கு போக வேண்டாம். திமுகவுக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தால் போகலாம். இல்லாவிட்டால் திமுகவுக்கு போகலாம் என்றனர். அதேபோல், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் திமுகவுக்கு போய்விட்டனர்.

அவரது மகன்களில் ஒருவர் பாஜகவுக்கும், மற்றொருவர் தவெகவுக்கும் போகலாம் என்று சொல்கிறார்கள். அதேவேளையில், ஓபிஎஸ் என்டிஏவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. அவர் திமுக, தவெகவுக்கு போக கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் ஓபிஎஸ் குழப்பத்தில் உள்ளார். தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணிக்கு சென்றால், அந்த பரபரப்பில் பாஜக கண்டுகொள்ளாது என்று நினைப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அமைதியாக உள்ளார்.

OPS

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாதி பேர் திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரேமலதா என்டிஏ கூட்டணிக்கு சென்றால் தங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்று நினைத்தார். பாமகவை விட கூடுதல் இடங்கள், ராஜய்சபா இடம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி  6 இடங்களுக்கு மேல் தர மாட்டார். அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் தான் உள்ளது. அதில் அன்புமணிக்கு ஒன்று தரப்பட உள்ளது. எனவே மற்றொரு இடத்தை தேமுதிகவுக்கு தருவார்களா என்பது தெரியாது.

அதனால் திமுகவிடம் பேசுகிறார்கள். திமுக தரப்பில் 6 சீட்டுகள், ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக சொல்கிறார்கள்.ஆனால் பிரேமலதா இரட்டை இலக்க இடங்கள் கேட்கிறார். அதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. அவர்களுடைய கெட்டப் பெயர் என்ன என்றால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இழுத்தடித்து விட்டு கடைசியாக எதாவது ஒரு அணியில் சேர்வார்கள். கடைசியில் அது வெற்றி பெறாது. 10 வருடங்களாக எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், இம்முறையாவது செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பேராசையுடன் இருக்கிறார்கள்.

ராமதாசை பொறுத்தவரை திமுக கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டன. பாமக பிளவுபட்ட நிலையில் உள்ளது. அவர்களுக்கு நெகட்டிவ் வாக்குகள் அதிகமாக உள்ளன. அமித்ஷாவை பொறுத்தவரை பாமக வாக்குகள் பிளவுபடக்கூடாது என்று நினைக்கிறார். எனவே ராமதாசை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். மாம்பலச் சின்னம் ராமதாசுக்கு கிடைக்காது. தேர்தல் நெருங்கிய நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர முடியாது. இந்த விவகாரத்தில் கடைசியில் எதுவும் நடக்கப் போவது இல்லை. அன்புமணிக்கு மாம்பல சின்னத்தை கொடுத்து விடுவார்கள். அமித்ஷா அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி கடைசியில் என்டிஏவில் சேர்ந்து, அன்புமணி கையெழுத்திடும் பாமக சின்னத்தை வாங்கி போட்டியிடுவார்கள்.

ராமதாசை பொருத்தவரை திமுக அணிக்கு செல்லலாம் என்று நினைக்கிறார். ஆனால் அவர்கள் இடம்பெறும் கூட்டணியில் தாங்கள் இடம்பெற மாட்டோம் என்று திருமாவளவன் உறுதியாக சொல்லிவிட்டார். ராமதாஸ் தனித்து போட்டியிட்டார் என்றால், பாமக வாக்குகள் பிரியும்.  அப்படி பிரிந்தால் திமுக கூட்டணிக்கு தான் சாதகமாகும். அதனால் அமித்ஷா பாமக வாக்குகள் பிரியக்கூடாது என்று நினைக்கிறார்.  ஓபிஎஸ், ராமதாஸ், பிரேமலதா என்று மூன்று பேருக்குமே அமித்ஷாவின் அழுத்தம் உள்ளது. ஆனால் பிரேமலதாவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கும் விவகாரத்தில் அதிமுக காத்திருக்க சொல்கிறது.

கடந்த தேர்தலில் 8 சதவீதம் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கடசியானது. ஆனால், இந்த முறை அவ்வளவு வாக்குகள் கிடைக்காது. முன்பு விஜய் ரசிகர்கள் சீமானுக்கு வாக்களித்து கொண்டிருந்தனர். இந்த முறை அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.  அவருடைய கட்சியில் சீமானுடைய நடவடிக்கைகள் பிடிக்காமல் பலர், விஜய் கட்சிக்கு சென்றுள்ளனர். கொள்கை பற்று உள்ளவர்கள் மட்டுமே சீமானிடம் உள்ளனர். அப்போது ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்று, இரண்டு சதவீதம் வாக்குகளை அதிகரித்தால் எப்போது ஆட்சிக்கு வருவார்கள்? சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் சீமானுக்கு 5 சதவீதம் வாக்குகள் தான் வந்துள்ளது. நான்கு முனைப் போட்டியில் திமுக எதிர்ப்பு வாக்குகள் சீமானுக்கு செல்வது குறையும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ