spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது - செல்வப்பெருந்தகை

நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரான அதிர்ச்சி அளிக்கும் செயலாகும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.நீதிமன்றத்திலேயே நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது - செல்வப்பெருந்தகைஇதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால், செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் மேற்கொண்ட இந்தக் கொடூரத் தாக்குதல், சட்டத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் புனித இடமாகும். அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தீ

ர்ப்பில் கருத்து வேறுபாடு இருந்தால், சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு வழிமுறைகள் உள்ளன; வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நீதிமன்றங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வலியுறுத்துகிறேன்” செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும் – செல்வப் பெருந்தகை

we-r-hiring

MUST READ