spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா‘வின் ஸ்டார்’ விஜய் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

‘வின் ஸ்டார்’ விஜய் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

-

- Advertisement -

நடிகா் முருகன் (எ) ‘வின் ஸ்டாா்’ விஜய் மாரடைப்பால் இன்று காலமானாா். அவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.‘வின் ஸ்டார்’ விஜய் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்நடிகா் முருகன் (எ) ‘வின் ஸ்டாா்’ விஜய் மாரடைப்பால் இன்று காலமானாா். இவா் ‘மக்கள் தொடர்பாளன்’, ‘எப்போதும் ராஜா’ படத்தில் நடித்துள்ளாா்.  ‘எப்போதும் ராஜா’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து பிரபலமானவா். அது மட்டுமின்றி, பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா்.

இந்நிலையில் ‘எப்போதும் ராஜா’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது அப்படத்தின் இயக்குநர் ‘வின் ஸ்டார்’ விஜய், எனக்கு சிறிய வயதிலிருந்தே எம்ஜிஆர், ரஜினி, விஜய் என எல்லோரையும் பிடிக்கும். அவா்களை பின்பற்றினாலே வெற்றி ஃபார்முலா தான். அதனால் தான் அவா்களை ஃபாலோ செய்து வருகிறேன். எனக்கு அரசியலில் ஈடுபாடும், ஆர்வமும் கிடையாது. சினிமாவில் இருந்து விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டதால் அவரின் இடம் காலியாகி விட்டது. அதனை நிரப்ப நான் ஆசைப்படுகிறேன்“ என்று கூறியிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

we-r-hiring

நடிகா் முருகன் சினிமாத்துறையில் தனது சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர். ‘வின் ஸ்டார்’ விஜய் தனது பிறந்தநாளை மாற்றுத்திறனாளி பள்ளிகளில் தான் கொண்டாடி மகிழ்வாராம்.

மேலும் சினிமா வட்டாரங்களில் சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாகப் பேசப்பட்டு வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகா் முருகனின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா். இவரது வீடியோக்கள் பல மீம் கன்டென்டாக SM-ல் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படம்… புரோமோ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

 

 

MUST READ