spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர்...

100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்

-

- Advertisement -

100 ரூபாயில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில்”சென்னை உலா hop on – hop off 2.0″ எனும் குளிர்சாதன சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துறை அமைச்சர்  சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

100 ரூபாயில் 26 இடங்கள்…”சென்னை உலா 2.O” சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம் – அமைச்சர் சிவசங்கர்

we-r-hiring

 

சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் “சென்னை உலா hop on – hop off 2.0” எனும் குளிர்சாதன சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துறை அமைச்சர்  சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த சுற்றுலா பேருந்து சேவையை திருவல்லிக்கேணி அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கொடி அசைத்து துவக்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தாா்.

அப்போது பேசிய அவர், சென்னையில் இருக்கும் முக்கிய தலங்களை ‘சென்னை உலா’ என்ற பெயரில் விண்டேஜ் பேருந்துகளாக ஏற்பாடு செய்து துணை முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார் என்றும் “Hop on hop off”  முறையில் அந்த பேருந்துகளில் பயணம் செய்யப்படுவதாகவும் சிவசங்கர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்த இந்த சேவை தமிழ்நாட்டில், சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர்

தற்போது அடுத்த கட்ட விரிவாக்கமாக “சென்னை உலா 2.0” என்ற முறையில் இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகள் என்றும் கூறினார்.

100 ரூபாய் கட்டணத்தில் 26 இடங்களை சுற்றி வரக்கூடிய வகையில் இந்த பேருந்து பயணத்திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்த சிவசங்கர், பெசன்ட் நகர், அண்ணா நூற்றாண்டு நூலகம், காந்தி நினைவு இடம், அடையார் புற்றுநோய் சிகிச்சை மையம், பெரியார் அறிவியல் மையம், உள்ளிட்ட கூடுதல் இடங்களை பொதுமக்கள் பார்க்க வசதியாக இந்த பேருந்தில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னை உலாவின் முதல் சுற்று மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது ”சென்னை உலா 2.0” பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் இருக்கின்ற நவக்கிரக கோவில்களுக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து உதக மண்டலத்திலும் அது தொடர்ந்து பல இடங்களிலும் இதுபோன்ற சுற்றுலா பேருந்து சேவை விரிவடைந்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படும் போது தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று குறைபட்ட அமைச்சர், பொதுமக்கள் அவதியுறும் செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்துத் தெரிந்தவுடன் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு, அந்த பிரச்சனை மெல்ல மெல்ல சரிசெயப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டின் மீது பாரா முகத்துடன் இருந்து வருகிறது என்று குறை கூறிய சிவசங்கர், ஒன்றிய ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகளில்  உண்மை இல்லை என்றார்.

திராவிட இயக்கத்தை காக்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற உறுதியான எண்ணத்துடனேயே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அவரை அன்புடன் வரவேற்பதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளாா்.

248.66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அருங்காட்சியக மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

MUST READ