spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராஜ்யசா தேர்தல் - வேட்புமனு பரிசீலனை தொடக்கம்…

ராஜ்யசா தேர்தல் – வேட்புமனு பரிசீலனை தொடக்கம்…

-

- Advertisement -

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.ராஜ்யசா தேர்தல் - வேட்புமனு பரிசீலனை தொடக்கம்…

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.  தொடங்கியது. மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

we-r-hiring

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று, அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றம் அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணியும்  வேட்பமனுத் தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நபர்களுக்கு குறைந்தது 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாதவர்களின் வேட்புமனுக்கள் இன்று நடைபெறும் பரிசீலனையில் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக மேலும் 6 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த அனைத்து வேட்புமனுக்களும் இன்று நடைபெறும் பரிசீலனையில் ஆய்வு செய்யப்படுகின்றன.

மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…

MUST READ