விஜய் மனைவி சங்கீதா விஜய் என்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில்,”பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. நான் தற்பொழுது விவாகரத்து கோரியுள்ளதால், சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். என்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோாினால் வழக்கறிஞா் மூலம் விஜய் தரப்பு மிரட்டுகின்றனா். விவாகரத்து வரை விஜயின் நீலாங்கரை வீட்டிலேயே தங்க அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும். இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என விஜய் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளாா்.
தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!


