Homeசெய்திகள்க்ரைம்4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!

4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!

-

- Advertisement -

சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக கூறி 4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ரியல் எஸ்டேட் பிரமுகர் உள்ளிட்ட இருவரை கைது செய்து, தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!சென்னை அடையாரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுகுமார்(52),  நிலம் வாங்கி விற்பனை செய்து வருகிறார். சென்னை அருகே  அனுமந்தபுரம் மற்றும் கருநீலம் ஆகிய ஊராட்சிகளில் 100 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறி அதனை பல்வேறு விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக அனுமந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன்(56) அடையாரை சேர்ந்த ரியல் எஸ்டேட் பிரமுகர்  ரகுபதி(59) ஆகியோர் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சுகுமார் அவர்களிடம் ஒட்டுமொத்தமாக நிலம் கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களிடம் 25.6.2023, 8.4.2024 ஆகிய இரண்டு தினங்களில்  ஒப்பந்தம் போட்டு  4 கோடியே 62 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.

we-r-hiring

பின்னர் குறித்த காலத்தில்  அந்த நிலம் குறித்து தொடர்ந்து கேட்டபோது இப்போ தருகிறேன் அப்பொழுது தருகிறேன் என ஹரிகிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் சுகுமாரை அழைகழித்து  ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது,  மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை போட்டோ ஒப்பந்தத்திற்கு   எந்த பதிலும் தெரிவிக்காததால் இது குறித்து சுகுமார் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் மாநகர காவல் ஆணையர்  அமல்ராஜ் இடம் நில மோசடி பிரிவில் புகாராக அளித்தார்.

அதன் பேரில் தாம்பரம் காவல் ஆணையரக நில மோசடி பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அனுமந்தபுரத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் அடையார் சேர்ந்த ரகுபதி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பணம் பெற்றது உறுதியானது.

மேலும் அதற்கான நிலத்தையும் கொடுக்கவில்லை என்பதால் அவர்கள் மீது மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுபோல் நிலம் சம்பந்தமாக மோசடி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

MUST READ