Homeசெய்திகள்தமிழ்நாடுபெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் - சி.ஐ.டி.யூ....

பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்

-

- Advertisement -

இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி C.I.T. U. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் - சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபுரம் டவர்ஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.  எரிபொருள் தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சட்டத்துக்கு புறம்பாக விலையை உயர்த்தி எரிபொருள் விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

we-r-hiring

Gas சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், எரிபொருளை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.

மேலும் ஈரான் போர் சூழலை பயன்படுத்தி பெட்ரோல் பங்குகள், எரிபொருட்களின் விலையை தன்னிச்சையாக உயர்த்துதல் உள்ளிட்ட அடாவடித்தனங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. எனவே பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை உடனடியாக ஒன்றிய அரசு சீர் செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யூ.வின் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்க மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டம் வாயிலாக வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்

MUST READ