சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருந்தும் பணி நாளையுடன் நிறைவு பெறுகிறது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில், பொது இடங்களில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கடைசி நாளாக மார்ச் 18, 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையுடன் பதிவு மற்றும் சிப் பொருத்தும் செயல்முறை நிறைவடைகிறது.
மாநகராட்சியின் அறிவிப்பின்படி ,100 ரூபாய் கட்டணத்தில் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி உரிமம் பெறாத மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மாடுகள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, உரிமையாளரைக் கண்டறிந்து, சாலைகளில் மாடுகள் திரிவதைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
எனவே, மாட்டு உரிமையாளர்கள் தங்கள் மாடுகளுக்கு உடனடியாக மைக்ரோசிப் பொருத்தி, உரிய ஆவணங்களைப் பெற்று, தண்டனையைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு
