மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.
ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை நேரடியாக உயர்த்துகிறது. இதன் விளைவாக அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலையும் உயர்ந்து, பொதுமக்களின் சேமிப்பும் செலவீனமும் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ”சரியான செயல்திட்டமோ, துரிதமான நடவடிக்கையோ இல்லாமல் வெறும் பேச்சுகளிலேயே தங்கியுள்ளது ”என ராகுல் காந்தி விமர்சித்தார்.
இதேவேளை, உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என்றும், அதன் தாக்கம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. சிலிண்டர் விலைகள் மேலும் உயர்த்தப்படலாம் என்ற எச்சரிக்கையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
