மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,500க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயங்கி வருகிறது. இந்த பேருந்துகளில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில் மின்சார இணைப்பு சிற்றுந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன் படி 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் செய்ய வேண்டி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த சிற்றுந்து பேருந்துகளின் இயக்கம், பராமரிப்பு, மின்சாரம், உள்கட்டமைப்பு பணிகளை சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களே ஏற்கவேண்டும். ஒவ்வொரு பேருந்துகளும் மாதத்திற்கு 4,800 கி.மீ. கட்டாயம் இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

