ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23 வயது பெண் மருத்துவர் ப்ரின்ஸி (Shreshtha) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள ரிசாலா பஜார் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான பிரின்சி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் மருத்துவ படிப்பை முடித்த இவர் மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுகளுக்கு தயாராகி வந்திருந்தாா்.
டாக்டருக்கு செல்ல பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். பூனையை கொண்டு வந்த பிறகு பிரின்ஸிக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவதால் பூனையை வளர்க்கக்கூடாது என அவரது தாயாா் கூறி வந்தாா். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்படும். இந்நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த பிரின்சி தனது அறையை உள்ளிருந்து பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது டாக்டா் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து ஹைதராபாத், ஆல்வால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அல்வால் போலீசார், பிரின்சியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உடலை காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பூனை வளர்க்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையப் போக்குவரத்து கேபிள் கத்தரிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை…
