spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகண்டுகொள்ளாத தனுஷ், கவின் பக்கம் திரும்பிய இளம் இயக்குனர்!?

கண்டுகொள்ளாத தனுஷ், கவின் பக்கம் திரும்பிய இளம் இயக்குனர்!?

-

- Advertisement -

இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து தானே புதிய படத்தை இயக்க இருக்கிறார் தனுஷ். அந்தப் படத்தில் நடிக்கவும் செய்கிறார்.

we-r-hiring

இதேபோல ‘வாத்தி’ படத்தை அடுத்து இன்னும் இரு நேரடி தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்தத் தகவல் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது வரை படம் உருவாகும் என்ற வகையில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. தனுஷும் அடுத்தடுத்த இயக்குனர்களை வாரி இறைத்து போட்டுகொண்டு வருகிறார். ஆனால் இளனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாகத் தெரியவில்லை.

எனவே இளன், கவின் பக்கம் திரும்பியதாகத் தெரிகிறது. அவர் கவின் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ