2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில் காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு எடுக்கபட்டது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வடிவேட்பாளர் பட்டியலை அக்கட்சின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளாா்.
வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி, பாரதிய ஜனதா கட்சியின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக உடனான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளாா்.

தமாகா வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் விவரம்:
ராணிப்பேட்டை – கார்த்திகேளன்,
ஈரோடு மேற்கு -யுவராஜா,
ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர்,
கும்பகோணம் – அசோக்குமர்,
கிள்ளியூர் – நவின் சைமன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.
மேலும், தாமரை சின்னத்தில் போட்டி ஏன்? என செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜி.கே.வாசன், “எங்கள் கட்சியின் ‘சைக்கிள்’ சின்னம் தொடர்பாக நிலவும் சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக இருப்பதால், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ‘தாமரை’ சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்,” என்று விளக்கமளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடப் பார்வையாளர் பியூஷ் கோயல் ஆகியோருடன் நடத்தப்பட்ட சுமுகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தமாகா போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகள் தற்போதைய திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் தொகுதிகள் என்பதால், அங்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமரை சின்னம் விவகாரம் – வாசன் முடிவுக்கு எதிர்ப்பு…நிர்வாகிகள் ராஜினாமா…
