மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர் நியமனத்தில் மத்திய அரசு இடஒதுக்கீடு கொள்கைகளை முறையாகப் பின்பற்றாமல் புறக்கணிப்பதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது இந்தப் பிரச்சனையை எழுப்பிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்துப் பல்வேறு புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட 1011 ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் (Non-Teaching Posts), இதுவரை 972 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.மருத்துவக் கல்லூரிக்கான ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 70% இடங்கள் இன்னும் காலியாகவே இருக்கின்றன.
நடைபெற்று வரும் குறைந்தபட்ச நியமனங்களிலும் இடஒதுக்கீடு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், சமூக நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
”தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளே ஆமை வேகத்தில் நடந்து வரும் சூழலில், அங்குள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும், இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது கண்டிக்கத்தக்கது” என மாணிக்கம் தாகூர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!
