காங்கிரஸ் கட்சியின் 28 தொகுதிகளின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலத்தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ளாா். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். இதில் மேலூா் தொகுதிக்கு மட்டும் வேட்பாளா் யாா் என்பதை அறிவிக்கவில்லை. மீதி 27 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுபவா்களின் பெயா் பட்டியலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்பு இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியல் விவரம்
ஸ்ரீபெரும்புதூர் (தனி): செல்வப்பெருந்தகை
பொன்னேரி (தனி): துரை சந்திரசேகர்
வேளச்சேரி: ஹசன் மௌலானா
சோளிங்கர்: முனிரத்னம்
ஊத்தங்கரை (தனி): குப்புசாமி
கிருஷ்ணகிரி: செல்ல குமார்
பென்னாகரம்: தமிழ்குமரன்ஆத்தூர் (தனி): அர்த்தநாரி
ஈரோடு கிழக்கு: கோபிநாத்
உதகை: ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம்: சூர்யபிரகாஷ்
சிங்காநல்லூர்: ஸ்ரீநிதி
துறையூர் (தனி): விச்சு லெனின் பிரசாத்
கடலூர்: சந்திரசேகரன்
மயிலாடுதுறை: ஜமால் யூனுஸ் முகமது
அறந்தாங்கி: ராமச்சந்திரன்
காரைக்குடி: மாங்குடி
கிள்ளியூர்: ராஜேஷ்குமார்
உசிலம்பட்டி: சரவணக்குமார்
சிவகாசி: கணேசன் அசோகன்
திருவாடானை: ராம கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில் (தனி): சங்கை கணேசன்
அம்பாசமுத்திரம்: வி.பி.துரை
நாங்குநேரி: ரூபி மனோகரன்
குளச்சல்: தாரகை கத்பர்ட்
விளவங்கோடு: பிரவீன்
27 பெயர்கள் கொண்ட காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
